அம்மா » அழகுக்குறிப்பு » அழகிய சிகை அலங்காரம்

அழகிய சிகை அலங்காரம்

12-02-26 14:54 0 கருத்து உங்கள் கருத்து

முதலில் கூந்தலை சிக் இல்லாமல் நன்றாக வார வேண்டும். பிறகு முன்புறம் இருக்கின்ற கூந்தலைத் தூக்கி இருக்கின்ற மாதிரி செய்து அந்த இடத்துக்கு பின்களை பொருத்தி அந்தக் கூந்தலை தனியாக விட வேண்டும்.

மீதி இருக்கின்ற கூந்தலை மூன்று சமபாகங்களாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ரப்பர்பாண்ட போட வேண்டும்.

பின்னர் ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக உருட்டி மேல்புறமாக சுற்றி ஒவ்வொரு சுருளின் உள்புறத்தில் இருந்து இறுக்கமாக பின்களை கோர்க்க வேண்டும். எல்லாச் சுருளையும் ஒன்றின்கீழ் ஒன்று வருமாறு செய்ய வேண்டும்.

அடுத்து மேல்புறத்தின் கூந்தனை இரண்டு சமபங்குகளாக பிரித்து ஜடையை பின்னி முதல் சுருளின் இரு பக்கமும் வரும்படி செய்து முதல் சுருளின் கீழ் பின் செய்ய வேண்டும். (நீண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு ஜடையின் கடைசி சுருளின் கீழ் பாகத்துக்கு வரும்படி பின்செய்ய வேண்டும்.) பின் அந்த ஜடையின் மேல் மற்றும் மூன்று சுருளின்மேல் அவரவர் இஸ்டம் போல் முத்துக்களால் அலங்கரிக்க வேண்டும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு