அம்மா » அழகுக்குறிப்பு » கறுப்பு முடிக்கு கஷாய எண்ணை

கறுப்பு முடிக்கு கஷாய எண்ணை

11-07-06 16:47 1 கருத்து உங்கள் கருத்து

உங்கள் முடி செம்படையா அல்லது முடி இல்லையா? உங்கள் முடி கறுத்து வளர இதோ ஒரு கஷாய எண்ணெய்.

சவுரி கொத்தான் (திருப்பா புல் என்றும் சிலர் கூறுவர். இது ஒரு வகை தரையில் படரும் செடி. இலை சிறிதாக இருக்கும்.) இதனை வேருடன் பிடுங்கி நீர் விடாமல் இடிக்க வேண்டும். இது பசுமையான செடி ஆதலால் நிறைய சாறு வரும். அச்சாற்றினை அரித்து சுமார் கால் லீட்டார் சாற்றிற்கு அரை லீட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து காய்ச்ச வேண்டும். சுமார் இருபது முப்பது நிமிடம் காய்ந்த பின்னரே ‘ஸ்’ என்ற சத்தம் அடங்கும். ஓசை அடங்கிய உடன் கைக்கு ஒரு படி அளவு அரலி மொட்டு, இரண்டு வெற்றிலை இலைகளை போட வேண்டும். போட்டவுடன் படபடவென்ற ஓசையுடன் வெடிக்கும். ஓசை மாறினவுடன் இறக்கிக் கொஞ்சம் தூளான சூடகத்தை போட வேண்டும். இவ்வெண்ணெய் பசுமையான வாசனையுடன் இருக்கும்.

அரளி மொட்டு தலை ஊரல், பொடுகுக்கு அருமருந்து.

அதிக செம்படை முடி உள்ளவர்கள், இச்சாற்றுடன் தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக பன்றி நெய்யைச் சேர்த்து காய்ச்சி தேய்க்க வேண்டும். 40 நாள் தேய்த்தால் போதும். முடி கறுத்துவிடும். அப்புறம் தேங்காய் எண்ணெய் காய்ச்சித் தேய்த்தால் போதுமானது.

உங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. BASKAR says:

    சவுரி கொத்தான் (திருப்பா புல்) எங்கு கிடைக்கும்.

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு