அம்மா » அழகுக்குறிப்பு » கொண்டை அலங்காரம் 1

கொண்டை அலங்காரம் 1

11-07-09 15:55 0 கருத்து உங்கள் கருத்து

இந்த கொண்டை அலங்காரம் நடுத்தரமான அதிக நீளமில்லாத கூந்தலை உடையவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

1. கூந்தலை நன்றாக சிக்கின்றி வாரிக்கொள்ளவும்

2. கூந்தலின் நடுப்பாகமாக ஒரு பகுதியை எடுத்து இரப்பர் பேன்ட் போட்டுக்கொள்ளவும். பிறகு அதை முறுக்கி சிறிய வளையமாக சுற்றி பின் குத்திக்கொள்ளவும்.

3. வளையத்தின் இருபக்கத்திலிருந்தும் ஒரு சிறிய பகுதி கூந்தலை எடுத்து வளையத்தின் கீழ் பின்னலாக போட்டுக் கொள்ளவும். பிறகு அதை வளையத்தை சுற்றிக் கொண்டு சென்று பின் குத்திக்கொள்ளவும். இப்பொழுது நடுவில் வளையமும் பிறகு பின்னலும் இருப்பதை பார்க்கலாம்.

4. மறுபடி நடுவாக இரண்டு பக்கத்திலிருந்தும் கூந்தலை எடுத்து முதலில் செய்தது போல முறுக்கிக்கொள்ளவும். இந்த முறுக்கிய கூந்தலை பின்னலின் மேலே வட்டமாக சுற்றி பின் குத்திக்கொள்ளவும்.

5. முன் பக்கமாக இரு பகுதியிலும் கூந்தலை விட்டுவிட்டு மீத கூந்தலை பின்னலாக போட்டுக்கொள்ளவும். இந்த பின்னலையும் முறுக்கிய கூந்தலின் மேல் வட்டமாகச் சுற்றிக்கொண்டு பின் குத்திக்கொள்ளவும்.

6. முன்பக்கமாக இரு பகுதியிலுள்ள கூந்தலை கொண்டையின் கீழ்ப்பக்கமாக கொண்டுவந்து அடியிலிருந்து பின்னலாக போட்டுக்கொண்டு கொண்டையின் நடுவில் குறுக்கே மேல்ப்பக்கமாக கொண்டு சென்று பின் குத்திக்கொள்ளவும். முதலில் சுற்றிய நடுப்பாகத்தில் உ்ள்ள வட்டமாக முறுக்கி இருக்கும் கூந்தலில் பூவோ அல்லது ஜடை பில்லையோ வைத்துக்கொள்ளலாம். நான்கு பக்கமும் பூவை வைத்துக்கொண்டால் கூந்தல் இன்னமும் சிறப்பாயிருக்கும்.

கீழே படங்களில் சொடுக்கி படிமுறைகளை படங்களாய் பாருங்கள்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு