அம்மா » அழகுக்குறிப்பு » கொண்டை அலங்காரம் 2

கொண்டை அலங்காரம் 2

11-07-09 16:45 0 கருத்து உங்கள் கருத்து

இந்த கொண்டை அலங்காரம் எல்லா வயதினருக்கும் ஏற்றது. அவரவர் முகத்திற்கேற்ப கொண்டையை ஏற்றியோ அல்லது இறக்கியோ போட்டுக்கொள்ளலாம்.

1. கூந்தலை ஷாம்பூ போட்டு அலசி உலர்த்திச் சிக்கலில்லாமல் சீவிக்கொள்ளவும்.

2. கூந்தலை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். காதின் அருகில் முன்பக்கத்திலிருந்து பிரியும் கூந்தலை இருசிறு பகுதிகளாகவும், மீதிக் கூந்தலை நடுப் பாகமாகவும் வைத்துக்கொள்ளவும்.

3. நடுப் பாகக் கூந்தலைப் படியப் படிய வாரிக் கூந்தலின் அடிப் பாக்கமாக இடது கைப்புறங்கையை வைத்துக் கூந்தலை இறுக்கமாக மடக்கிக் கொள்ளவும்.

4. இறுக்கமாக மடக்கிய பின் மேலே மீதியுள்ள கூந்தல் பகுதியை அதைச்சுற்றி கொண்டுவந்து பின் குத்திக்கொள்ளவும்.

5. காதின் இருபக்கத்திலிருக்கும் கூந்தலை இடப்பகுதியை வலப்பக்கமாகவும், வலது பகுதியை இடப்பக்கமாகவும் நடுவில் மடக்கிய கூந்தலின் அடியில் சுற்றிக்கொண்டு சென்று பின் குத்திக்கொள்ளவும். இந்த இரு பகுதிகளையும் சிறிய ரோல் அல்லது வளையமாக போட்டுக்கொள்ளலாம்

6. இப்போது இறுக்கமாக மடக்கிய கூந்தல் பகுதியை (படிமுறை 3) தேவையான அளவு பிரித்துக்கொண்டு பின் குத்திக்கொள்ளவும். பூ அல்லது கிளிப் கொண்டு மேலும் அழகு செய்யலாம்.

கீழே படங்களை சொடுக்கி படிமுறைகளை படங்களாக பாருங்கள்:

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு