அம்மா » அழகுக்குறிப்பு » தலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம்

தலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம்

12-02-11 08:24 5 கருத்து உங்கள் கருத்து

தலைமுடி கொட்டுபவர்கள் நிச்சயம் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய தைலம் இது.

தேவையானவை

பொன்னாங்கண்ணிக் கீரை – அரை கிலோ (இரண்டு கட்டு வரலாம்)
நல்லெண்ணெய் – கால் கிலோ
தேங்காய் நெய் – கால் கிலோ
விளக்கெண்ணெய் – 100 கிராம்

செய்முறை:

முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, உரலில் சுத்தமாக இடித்து ஒட்டச் சாறு பிழிந்து கொள்ளவும். சாறு ஒரு டம்ளர் வரை தாராளமாக வரும். தண்ணீர் சேர்க்க வேண்டாம் (கீரையை கழுவும்போது அதுவே தண்ணீராய் இருக்கும்.)

பிறகு சாற்றை ஒரு தட்டிலிட்டு வெயிலில் உருட்ட வரும் பதம்வரை காய வைத்து, மெல்லிய வடைபோல தட்டிக்கொள்ளவும். தட்டவராது போனால் கெட்டிக் குழம்பாய் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மூன்று எண்ணெய்களையும் ஒன்று சேர்த்து, இக்கீரை வடையை அல்லது குழம்பைச் சேர்த்து நிதானமாக தணலில் காய்ச்சவும் (தாமிர பாத்திரம் மிக நல்லது அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரம் நல்லது). அந்த எண்ணெய் பொங்கும், இறக்கி விடவும். நுரை அடங்கி கீரைச்சாறு கசண்டாக அடியில் படியத்தொடங்கியவுடன், எண்ணெய் தெளியத் தொடங்கும்.

எண்ணெய் தெளிந்து ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி போத்தலில் நிரப்பி காலையில் சூரியன் உதிக்க முன்னரும், மாலையில் சூரியன் அஸ்தமித்த பின்னரும் உபயோகிக்கவும். வியர்வையில் இதனை உபயோகிக்க வேண்டாம். இத்தைலம் முடிகொட்டுவதைத் தவிர்த்து, கூந்தலை நல்ல கருமையாக்குவதோடு, கண்ணுக்கும் மூளைக்கு குளிர்ச்சி தருகின்றது.

இதனை தடிமன், காய்ச்சல் நேரங்களில் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.

உங்களது 5 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. kavaskar says:

    thaalaimuti koitdukirathu auge 24 heer atarthi ellai hervamatti vanki ushpannan sariellai yannapanrathu?

  2. shiriz says:

    amma anaku thalai vali ullathu poduvaha thinamum mathiri anna saivathu ? ithu nalama ? plz pathil anupavum

  3. தலையில் தொல்லை அதிகமாக இருக்கு அதுக்கு ஒரு வளி சொல்லுங்க பிளி்ஸ்

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு