அம்மா » அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அம்மா! இணையத்தளம்?

அம்மா! இணையத்தளம் பல்வேறுபட்ட அழகுக் குறிப்புக்கள், சமையல் குறிப்புக்கள், கைவினை அலங்காரப்பொருட்களை செய்யும் வழிமுறைகள், தையல் குறிப்புக்கள், கோலமிடும் முறைகள், பாட்டி வைத்தியம்  போன்ற பல்வேறு வகையான விடயங்களை கொண்டிருக்கும்.

Permalink.

குறிப்புகள் எங்கிருந்து பெறப்படுகின்றன?

நீண்ட காலமாகவே எனது தாயார் இவ்வகையான குறிப்புக்களை பல்வேறு பட்ட இதழ்களிலிருந்தும் (மங்கையர் மலர் போன்றவை) சேகரித்து பெரிய குறிப்புப் புத்தகங்களில் சேமித்து வைத்து வருகின்றார். பல்வேறு பட்ட நாட்டுச்சூழ்நிலைகள் காரணமாக இக் குறிப்புப் புத்தகங்கள் பெருமளிவில் பழுதடைந்து வந்ததால் அவற்றை அனைவரும் வாசித்து பயன்பெறும் வகையில் இணையத்தில் தரவேற்றி வருகின்றேன்.

Permalink.

எவ்வாறு பங்களிப்பது

உங்களிடமும் ஏதாவது குறிப்புக்கள், அக்கங்கள் இருப்பின் “பங்களிக்க” பக்கத்திற்கு சென்று அனுப்பி வையுங்கள். அவை சரியான பிரிவுகளில் பிரசுரிக்கப்படும் (நீங்கள் விரும்பின் உங்கள் பெயர் விபரங்களும் ஆக்கத்துடன் வௌியிடப்படும்)

Permalink.

வேறு குறிப்புக்கள் சேர்க்கப்படுமா?

நிச்சயமாக வேறு பல இடங்களிலிருந்தும் குறிப்புக்கள் பெறப்பட்டு இவ்விணையத்தளத்தில் இணைக்கபட இருக்கின்றன. எனது தாயாரின் குறிப்புக்கள் அனைத்தும் இணைக்கப்பட்ட பின்னர், பல்வேறு நாடுகளினைச்சேர்ந்த குறிப்புக்கள் பெறப்பட்டு இணைக்கபட இருக்கின்றன. அவற்றிற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன

Permalink.

தொடர்புகளுக்கு