அம்மா » கைவினை » உல்லன் கரடி

உல்லன் கரடி

11-07-06 15:20 0 கருத்து உங்கள் கருத்து

உங்கள் குழந்தைக்கு விளையாட ஒரு அழகான கரடிப்பொம்மை செய்து தரலாம். ஆபத்தில்லாத அதே சமயம் அழகு நிறைந்த சிக்கனமான பொம்மை இது.

தேவையான பொருட்கள்:

 • உல்லன் நூல் – 1 அவுன்சு
 • பென்சில் – 1
 • பிளாஸ்டிக் மணிகள் – 2
 • ஸ்பாஞ்ச் – சிறுதுண்டு
 • Fevicol பசை – ஒட்டுவதற்கு

அளவுகள்:

 • காது – 7.5″ – ஒரு ஜதை
 • கை – 90″ – ஒரு ஜதை
 • கால் – 105″ – ஒரு ஜதை
 • தலை – பென்சிலின் பாதி அளவு.
 • உடல் – மிகுந்த நூல் முழுவதும். பென்சிலின் முக்கால் அளவு.

செய்முறை:

ஒரு சின்ன துண்டு உல்லன் நூலை பென்சிலின் மேல் வைத்து, 7.5″ உல்லன் நூலை எடுத்து சின்ன உல்லன் நூல் துண்டின்மீது வரிசையாக செருக்கமாக 1″ அளவில் சுற்றிக்கொள்ள வேண்டும். சுற்றின் பின், அதை பென்சிலிலிருந்து மெதுவாக உருவி, சின்ன உல்லன் நூல் துண்டின் இருமுனையையும் இறுக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும்.

பின் வளைவு வளைவாக (Loop) இப்போது காணப்படும் துண்டினைக் கத்தரிக்கோலின் உதவிகொண்டு வெட்டிக்கொண்டால் பந்துபோன்ற அமைப்புக் கிடைக்கும்.

இதை காதிற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

வெட்டின உடனே, அந்த பந்து போன்ற உருண்டையை உள்ளங்கையில் வைத்து உருட்டிக்கொண்டால், உருண்டை வடிவம் கிடைக்கும்.

இதுபோல கை, கால், தலை செய்துகொள்ள வேண்டும்.

மிகுதிநூலை பென்சிலின் முக்கால் அளவுக்கு மேலே மேலே சுற்றி முன்காதிற்கு சொன்னபடி எடுத்து வெட்டிக்கொள்ள வேண்டும். இதனை நீள வாட்டத்தில் உருட்டிக்கொள்ள வேண்டும்.

பின் எல்லாவற்றையும் பெவிகால் உதவிகொண்டு ஒட்டவேண்டும். கழுத்திற்கு ஸ்பான்ஞ்சை வெட்டி குண்டூசிகொண்டு குத்திவிட வேண்டும். மூக்கிற்கு மூக்குவடிவில் வெட்டி ஒட்டிக்கொள்ள வேண்டும்.

வெட்டின மீந்த துண்டுகளை பெவிகாலினால் உருட்டி வால்பாகத்தில் ஒட்ட வேண்டும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

 1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு