அம்மா » சமையல் » அடையப்பட்ட கறி மிளகாய்க் கறி

அடையப்பட்ட கறி மிளகாய்க் கறி

12-04-03 10:36 0 கருத்து உங்கள் கருத்து

தேவையான பொருட்கள்

1. 6 கறி மிளகாய்கள்
2. இரண்டு பெரிய வெங்காயம் வெட்டியது
3. ஒரு மேசைக்கரண்டி மாசிக் கருவாடு
4. ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்
5. ஒரு தேக்கரண்டி தனி மிளகாய்த்தூள்
6. 4-5 கருவேப்பிலை
7. இரண்டு பல்லு உள்ளி பொடிதாக்கியது
8. அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்
9. ஒரு சின்ன துண்டு கறுவா
10. அரை கப் தேங்காய்ப் பால்
11. இரண்டு மேசைக்கரண்டி தேங்காய் நெய்
12. உப்பு தேவையான அளவு

செய்முறை

கறி மிளகாய்களை நெடுக்காக கிழித்து, உள்ளிருக்கு விதைகளை நீக்கி ஒரு புறம் வைக்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஒரு பாத்திரத்தில் இட்டு உள்ளியையும் போட்டு 20 செக்கன் அளவுக்கு சூடாக்கவும்.

வெங்காயம், மாசிக்கருவாடு, கருவேப்பிலை, தனிமிளகாய்த் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பினைப் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும்வரை சமைக்கவும்.

இந்த வெங்காயக் கலவையை மிளகாயினுள் வைத்து ஒரு புறம் வைக்கவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் மஞ்சள் தூள் மீதமுள்ள மிளகாய்த்தூள், தேங்காய்ப் பால் கொஞ்சம் உப்பும் சேர்த்து கலக்கவும். சட்டியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு மிளகாயை அதில் போட்டு இரண்டு நிமிடம் வரை எல்லா பக்கமும் நன்கு படுமாறு பொரிக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் கலவையை விட்டு மேலும் ஒரு இரண்டு நிமிடங்கள் சமைக்கவும். சுவையான கறிமிளகாய்க் கறி தயாராகி விடும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு