அம்மா » சமையல் » உருளைக்கிழங்கு அப்பளம்

உருளைக்கிழங்கு அப்பளம்

11-07-31 13:09 1 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை:
1. உருளைக்கிழங்கு – அரை கிலோ
2. ஜவ்வரிசி – அரை கிலோ
3. மிளகாய்ப்பொடி – 4 தேக்கரண்டி
4. தேங்காய் எண்ணெய் – 50 கிராம்
5. உப்பு, பொடித்த பெருங்காயம் – தேவையான அளவு
6. அரிசி மா அல்லது மைதா மா – 100 கிராம் (அப்பளம் இட தேவையான அளவு)

செய்முறை:
ஜவ்வரிசியை முதலில் சுத்தம் செய்து கொண்டு, கிரைண்டரில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்றாக அலம்பி தோலுடன் வேகவைத்து, ஆறிய பின் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன், ஜவ்வரிசி மாவு, மிளகாய்ப்பொடி, உப்பு பெருங்காயம் இவற்றைக் கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு கல்லுரலில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, மேற்கூறிய கலவையை போட்டு சிறிது சிறிதாக எண்ணெய் தொட்டுக்கொண்டு மென்மையாக இடித்துக் கொள்ளவும்.

இடித்த மாவை தேவைக்கேற்ப சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொண்டு, அரிசி மா அல்லது மைதா மா தொட்டுக்கொண்டு அப்பளமாக இடவும். இட்ட அப்பளங்களை உடனே வெயிலில் உலர்த்தி எடுக்கவும். அரை கிலோ உருளைக்கிழங்கில் 75 அப்பளம் வரை கிடைக்கும்.

உங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. rajasinghac says:

    super madam i well do it soon and tell it’s taste

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு