அம்மா » சமையல் » உளுந்து வடை

உளுந்து வடை

20-10-25 08:29 0 கருத்து உங்கள் கருத்து

தேவையான பொருட்கள்

 1. உளுந்து – 1 சுண்டு (1/4 கிலோ)
 2. தேங்காய் – 1/2 பாதி மேற்பூ
 3. வெங்காயம்- 1 பெரிய வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கியது
 4. பச்சை மிளகாய்- 1௦ பொடிப் பொடியாக நறுக்கியது
 5. கறிவேப்பிலை – 3 ஈர்க்கு பொடிப் பொடியாக நறுக்கியது
 6. காய்ந்த மிளகாய்- 5
 7. இஞ்சி- ஒரு சிறிய துண்டு
 8. பெருஞ்சீரகம் – 2 தேகரண்டி
 9. உப்பு- தேவையான அளவு
 10. தேங்காய் எண்ணை -பொரிப்பதற்கு

செய்முறை

 1. உளுந்தை நன்றாக கழுவி 2-3 மணித்தியாலம் நன்றாக ஊறவிட்டு தோலை நீக்கி கொள்ளவும்.
 2. உளுந்து, தேங்காய்ப் பூ, இஞ்சி ,காய்ந்த மிளகாய் மற்றும்  உப்பு என்பவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 3. கடைசியாக பெருஞ்சீரகம் போட்டு ஒரு சுத்து சுத்தி அரைத்த கலவையை பாத்திரத்துக்கு மாற்றி கொள்ளவும்.(நீர் விடாமல் அரைக்கவும் )
 4. அரைத்த கலவையுடன் வெங்காயம், பச்சை மிளகாய்   ,கறிவேப்பிலை மற்றும் இரு மேசை கரண்டி நீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 5. கடாயில் தேங்காய் எண்ணை விட்டு நன்றாக கொதித்ததும் அந்த கவவையை சிறு சிறு உடுண்டைகளாக உருட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
 6. சுவையான உளுந்து வடை தயார்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

 1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு