அம்மா » சமையல் » உஸல்

உஸல்

11-07-09 12:44 1 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை:

பச்சைப்பயறு – 500 கிராம்
வெங்காயம் – 2
சீரகம் – கால் டீகரண்டி
தனியா – கால் டீகரண்டி
கடுகு – கால் டீகரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
பச்சைமிளகாய் – 2
மஞ்சள் பொடி – கால் டீகரண்டி
மிளகாயப்பொடி – 1 டீகரண்டி
தனியாப்பொடியும் சீரக்பொடியும் – 1 டீகரண்டி
கரம்மசாலா – அரை டீகரண்டி
கறிவேப்பிலை – சில இணுக்குகள்
சமையல் எண்ணெய் – 4 டீகரண்டி
தேங்காய்த் துருவல் – 2 டீகரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயறைக் கொட்டி சுமார் 12 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து..

நீரை வடிகட்டி, அதை ஒரு சல்லடை அல்லது துணியில் கொட்டி மூடிபோட்டு 12 மணி நேரம் அப்படியே வைத்து விடவும். இதனால் பச்சைப்பயறில் முழைவிட ஏதுவாகும்.

பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடேறியவுடன் சீரகம், கடுகு, பச்சைமிளகாய்த்துண்டுகள், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு அத்துடன் வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் முளைவிட்ட பயறு, சிறிதளவு தண்ணீர், மிளகாய்ப்பொடி, மஞ்சள்ப்பொடி, கரம்மசாலா, சீரக-தனியாப்பொடி, கறிவேப்பிலை, உப்பு தேங்காய் துருவல் ஆகியவற்றையும் இவற்றுடன் கொட்டி அரைமணி நேரம் வெகவிடவும்.

பின்குறிப்பு: முளைவிடக்கூடிய வேறு எந்த பயறு கடலை வகைகளைக்கொண்டும் இந்த உஸலைத் தயாரிக்கலாம்.

உங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. […] உஸல் – 500 கிராம் பதல் பாஜி – 500 கிராம் கார மிக்சர் – 250 கிராம் தயிர் – 500 கிராம் வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது) எலுமிச்சம்பழ துண்டுகள் – 2 உப்பு – தேவைக்கேற்ப மிளகாய்ப்பொடி – தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை – ஒரு கொத்து […]

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு