அம்மா » சமையல் » கடுகு சாதம்
கடுகு சாதம்
தேவையான பொருட்கள்
- காய்ந்த மிளகாய் – 10
- கடுகு – 1 மேசை கரண்டி
- மல்லி – 2 மேசை கரண்டி
- பச்சை அரிசி – 1 மேசை கரண்டி
- மிளகு – 1 மேசை கரண்டி
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – 3 ஈர்க்கு
- நெய்- 3 மேசை கரண்டி
- இஞ்சி- ஒரு சிறிய துண்டு போடி பொடியாக நறுக்கியது
- கீரி சம்பா – 2 சுண்டு
செய்முறை
- அரிசியை குழையாமல் அவித்து கரண்டி நெய் விட்டு கிளறி நன்கு ஆற விடவும்.
- கடுகு, மல்லி , மிளகு ,பச்சை அரிசி என்பவற்றை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 கரண்டி நெய் விட்டு காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு போட்டு தாளிக்கவும்.
- அதற்குள் அரைத்து வைத்துள்ள போடி, மஞ்சள் தூள் சிறிதளவு , அவித்து வைத்துள்ள சோறு என்பவற்றையும் போட்டு நன்றாக கிளறவும்.
- 5 நிமிடம் மிதமான தீயில் விடவும்.
- கடுகு சாதம் தயார்.
உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட