அம்மா » சமையல் » தனியாப் பொடி

தனியாப் பொடி

11-07-27 12:44 0 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை:

1. தனியா – 1 கோப்பை
2. உளுத்தம் பருப்பு – கால் கோப்பை
3. கடலைப்பருப்பு – அரைக்கால் கோப்பை
4. மிளகாய் வற்றல் – 12
5. பெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டி
6. கடுகு – 1 தேக்கரண்டி
7. புளி – எலுமிச்சம்பழ அளவு
8. வெல்லம் – ஒரு சிறிய கட்டி (உதிர்த்தால் ஒரு தேக்கரண்டி அளவு)
9. உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

1. தனியா, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை தனித்தனியாக கருகாமல் வறுத்துக்கொள்ள வேண்டும்.
2. பிறகு சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதிலேயே பெருங்காயத்தை பொரித்து, புளியையும் பொரித்து வைக்கவும்.
3. உப்பையும் (கல் உப்பு) வறுத்தால் நல்லது.
4. பிறகு, முதலில் பருப்புக்களை பொடிசெய்து, பிறகு கடுகு, பெருங்காயம், புளியையும் சேர்த்து பொடித்து, பின் வெல்லத்தையும் சேர்த்து பொடிக்கவும்.
5. கடைசியாக நன்கு கலந்து வைக்கவும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு