அம்மா » சமையல் » நீலகிரி குருமா

நீலகிரி குருமா

11-07-09 12:27 1 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை:

இறைச்சி – 1 கிலோ
பூண்டு – 10 கிராம்
வெங்காயம் – 250 கிராம்
இஞ்சி – 10 கிராம்
கசகசா – 20 கிராம்
தயிர் – 250 கிராம்
பச்சைமிளகாய் – 5
தனியாப்பொடி – 10 கிராம்
கரம் மசாலா – 10 கிராம்
நெய் அல்லது சமையல் எண்ணெய் – 120 கிராம்
கொத்தமல்லி தழை – அரை கட்டு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

இறைச்சியைக் கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி, தயிரில் போட்டு அரைமணிநேரம் ஊற வைக்கவும்.

பாதி அளவு வெங்காயம் (125 கிராம்), பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு, கசகசா ஆகியவற்றை அம்மியில் வைத்து அரைத்து அந்தக் கலவையை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மீதி இருக்கும் வெங்காயத்தை நன்றாக பழுப்பு நிறம் வரும் வரையில் வதக்கி, அதனுடன் தனியாப்பொடி, இறைச்சியை சேர்த்து வெந்தபின், கரம்மசாலா தூவி அடுப்பில் இருக்கும் பாத்திரத்தை கீழே இறக்கி விடவும்.

உங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. fasmi says:

    thank you, i will try to do this.

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு