அம்மா » சமையல் » பதல் பாஜி

பதல் பாஜி

11-07-09 13:10 0 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 500 கிராம்
தக்காளி – 225 கிராம்
சீரகம் – கால் டீகரண்டி
கடுகு – கால் டீகரண்டி
பச்சைமிளகாய் – 2
மிளகாய்ப்பொடி – 1 டீகரண்டி
கரம் மசாலா – அரை டீகரண்டி
தனியா-சீரகப்பொடி – 1டீகரண்டி
மஞ்சள் பொடி – கால் டீகரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
பெருங்காயம் – ஒரு துண்டு
சமையல் எண்ணெய் – 4 டீகரண்டி
தேங்காய் துருவல் – 2 டீகரண்டி
வெங்காயம் – 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, எட்டு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடேற்றியவுடன் அதில் சீரகம், கடுகு, பச்சை மிளகாய்த்துண்டு பெருங்காயம் ஆகியவற்றைப்போட்டு, பின் வெங்காயத் துண்டுகளையும் கொட்டி 2 நிமிடம் வேகவிடவும்.

அடுத்து, அதில் தக்காளி, உருளைக்கிழங்குத் துண்டுகள், மிளகாய்ப்பொடி தனியா-சீரகப்பொடி, கரம்மசாலா, மஞ்சள்ப் பொடி, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல், உப்பு இவற்றையும் சேர்த்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி சுமார் 25 நிமிடங்கள் வேகவிடவும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு