அம்மா » சமையல் » பப்புல் பொடி
பப்புல் பொடி
முறை 1
தேவையானவை
1. பொட்டுக் கடலை – 2 கோப்பை
2. தனியா – அரைக்கால் கோப்பை
3. மிளகு – 1 தேக்கரண்டி
4. சீரகம் – 1 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் – 10
6. பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
7. தேவையான அளவு உப்பு
செய்முறை
1. மேற்கண்ட எல்லா சாமான்களையும், வெறும் சட்டியில் காந்தாமல் தனித்தனியாக வறுக்கவும்.
2. பிறகு திட்டமான உப்பு சேர்த்து பொடிக்கவும்.
முறை 2
தேவையானவை
1. பொட்டுக்கடலை – 2 கோப்பை
2. மிளகாய் வற்றல் – 6
3. பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு அல்லது 1 தேக்கரண்டி தூள்
4. உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. மேற்கண்ட பொருட்களை ஒரு நாள் பூராகவும் நன்றாக வெயிலில் வைத்து காய வைக்கவும்.
2. பிறகு பெருங்காயம் திட்டமான உப்பு சேர்த்து பொடித்தக்கொள்ளவும்.
முறை 3
தேவையானவை
1. பயத்தம் பருப்பு – 2 கோப்பை
2. மிளகாய் வற்றல் – 2
3. பொட்டுக் கடலை – 1 கோப்பை
4. பெருங்காயம் – 1 சிறிய துண்டு அல்லது 1 தேக்கரண்டி தூள்
5. கறிவேப்பிலை – வாசனைக்கு
6. உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. மேற்கண்ட சாமான்களை தனித்தனியாக காந்தாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வாசனை வரும் அளவு வறுத்து கொட்டி ஆறவிடவும்.
2. கறிவேப்பிலையையும் அதில் பொரித்து போடவும்.
3. பிறகு திட்டமாக உப்பு சேர்த்து பொடிக்கவும்.
உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட