அம்மா » சமையல் » பலாச்சுழை அப்பளம்

பலாச்சுழை அப்பளம்

11-08-01 13:18 3 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை:
1. பலாச்சுழை (பெரிய அளவு) – 30
2. காய்ந்த மிளகாய் – 10
3. பெருங்காயம் – சிறிதளவு
4. தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
5. உப்பு – தேவையான அளவு

செய்முறை:
பலாச்சுளையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீரில் வேக வைக்கவும். பாதி வெந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடிகட்டவும்.

வேகவைத்த பலாச்சுளையுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, ஆகியவற்றை சேர்த்து உரலில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பிளாஸ்டிக் தாளில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு, அரைத்தெடுத்த விழுதை அத்தாளில் சமமாக பரப்பவும். பிறகு அதனை வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பின் பிளாஸ்டிக் தாளில் இருந்து எடுத்து, வேண்டிய அளவில் சதுரங்களாய் வெட்டி, ஒரு டின்னில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

இதுவே பலாச்சுழை அப்பளம். தேவயான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

உங்களது 3 கருத்துக்கள் பின்னூட்டமிட

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு