அம்மா » சமையல் » பிரண்டை வத்தல்
பிரண்டை வத்தல்
தேவையான பொருட்கள்:
- பச்சை அரிசி -4 கோப்பை
- சவ்வரிசி -அரை கோப்பை
- உப்பு-தேவையான அளவு.
- நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி
- ஓமம்-2 தேக்கரண்டி
- பிரண்டை- சிறு சிறு துண்டுகளாக வெட்டியது 1 கோப்பை
செய்முறை:
- பச்சை அரிசியை கழுவி நிழலில் காய வைக்கவும்(உலர்த்தவும்)
- கய்ந்ததும் அதில் சவ்வரிசி போட்டு நன்றாக அரைக்கவும்
- சிறு துண்டுகளாக வெட்டிய பிரண்டையை நன்றாக அரைத்து சாறு எடுக்கவும்
- 1 பாத்திரத்தில் 1௦ கோப்பை நீர் விட்டு அடுப்பில் கொதிக்கவிடவும்
- கொதித்த நீரை இறக்கி பிரண்டை சாறு, உப்பு ,ஓமம், நல்லெண்ணெய், மற்றும் அரைத்த மா என்பவற்றை போட்டு கட்டி படாமல் நன்றாக கிளறி கூழ் பதமாக எடுக்கவும்
- பின் ஒரு கரண்டியால் பொலித்தின் பேபரில் வட்ட வட்டமாக விட்டு 4 வெயிலில் காயவிடவும்.
இதுவே பிரண்டை வத்தல் . தேவயான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.
உங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட
It’s something different..