அம்மா » சமையல் » மசாலாத்தூள்

மசாலாத்தூள்

11-08-17 13:22 1 கருத்து உங்கள் கருத்து

தேவையானவை –

1. காய்ந்த மிளகாய் (வற்றல்) – அரை கிலோ
2. கசகசா – 50 கிராம்
3. பொட்டுக்கடலை – 50 கிராம்
4. சோம்பு – 50 கிராம்
5. சீரகம் – 50 கிராம்
6. மிளகு – 20
7. தேவையானால் சிறிது பட்டை, இலவங்க இலை, 2 கராம்பு

செய்முறை –

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து மேற்கூறியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து கடைசியில் மிளகாயையும் சிறிது வறுத்து மிஷினில் கொடுத்து திரித்து வைத்துக்கொண்டால் தேவை ஏற்பட்ட போது, தேங்காயை மட்டும் அரைத்து வதங்கும் காய்கறியில் போட்டு இந்த மசாலாப் பொடியில் 2 அல்லது 3 ஸ்பூன் (தேவையான காரத்திற்கு ஏற்றவாறு) போட்டு கிளறி இறக்கினால் எந்த மசாலாக் கறியும் அருமையாக இருக்கும். (முக்கியமாக உருளைக்கிழங்கு மசாலாக்கறி)

உங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. PETCHIAMMAL says:

    SORRY TO SAY THIS.DO YOU NO ADD KOTHAMALI.SO PLS ADD KOTHAMALI,KADALAI PARUPU,THUVARAM PARUPU,ULUNTHAM PARUPU. THANK U.

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு